கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில்!

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில்!
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில்! 1

கட்டுப்பாடற்ற வேகம் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது 

கிளிநொச்சி பகுதியில் இருந்து வேகமாக மண்ணுடன் வருகை தந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்தின் பின் பகுதியில் மோதியதில் பேருந்தின் பின் புறத்தில் அமர்ந்த பயணித்த பயணி காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை வாகனத்தின் மூலம் 

கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரனையை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பகிர்ந்துகொள்ள