கிளியில் காணாமல் போனவரது எச்சங்கள் மீட்பு!

கிளியில் காணாமல் போனவரது எச்சங்கள் மீட்பு!

கடந்த ஜீலை மாதம் காணமல்போன முதியவருடைய எலும்பு எச்சங்கள் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி – தம்பகாமம் காட்டு பகுதியிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த யூலை மாதம் 27 ஆம் திகதி  வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியைச்சேர்ந்த 58 வயதுடைய கார்த்திகேசு சுந்திரமூர்த்தி என்பவர் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர்  தம்பகாமம் ஆற்றங்கரை காட்டுப்பகுதியில் உரு சிதைந்த நிலையில் எலும்புக் கூடுகளாக இருப்பதனை காட்டுப்பகுதியில் குளை வெட்டுவதற்காக சென்ற கிராமவாசி ஒருவர் கண்டுள்ளார்.

பளை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  குறித்த நபரின் எலும்புக்கூடுகள் பல்வேறு திசைகளில் இருப்பது இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரை உறவினர்கள் தேடி இருந்தபோதிலும் அவர் கிடைக்கப்பெறவில்லை இருப்பினும்  குறித்த நபர் காணாமல்  போனது தொடர்பாக கிராம சேவகருக்கு தெரிவித்திருந்த போதும் 

பளை பொஸில் குடும்பத்தினர் முறைப்பாடுகளும் மேற்கொள்ளவில்லை என போலீசார் தெரிவித்தனர். இறந்தவரின் உறவினர்கள் அவரது

ஆடைகளை கொண்டே  அடையாளம் காணப்பட்டதுடன் நாளை நீதிமன்ற அனுமதியுடன் குறித்த நபரின் எலும்புக்கூடுகள்  மீட்கப்படும் என ளை போலீசார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள