கிழக்கு நோர்வே : ஆயிரக்கணக்கானோர் மின்சாரத்தை இழந்துள்ளனர்!

கிழக்கு நோர்வே : ஆயிரக்கணக்கானோர் மின்சாரத்தை இழந்துள்ளனர்!

இன்று வியாழன் பிற்பகல், கிழக்கு நோர்வேயில், பலத்த காற்று காரணமாக ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

கிழக்கு நோர்வேயில் பல மரங்கள் மின் கம்பிகளுக்கு மேல் விழுந்துள்ளன என்றும், இதனால் இப்போது, 3719 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர் என்றும் Hafslund தகவல் தொடர்பு மேலாளர் Morten Schau, 13.45 மணியளவில் Dagbladet பத்திரிக்கைக்கு கூறியுள்ளார்.

Lillestrøm, Ullensaker, Nes, Oslo, Sarpsborg, Ås, Nordre Follo, Halden மற்றும் Aremark ஆகிய இடங்களிலும் மின் தடைகள் இருப்பதை Hafslund வலைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலதிக தகவல்: Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments