சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்ட மலேசிய போர் விமானங்கள்

You are currently viewing சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்ட மலேசிய போர் விமானங்கள்

தங்கள் நாட்டு வான் பகுதிக்குள் சீன விமானப்படை விமானங்கள் அத்துமீறி ஊடுருவியதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் மலேசிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தென் சீன கடல் பகுதியில் சீன விமானப்படையினரின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தொடர்பாக மலேசிய விமானப்படை எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சீன விமானப்படையின் 16 ஜெட் விமானங்கள் மலேசிய நாட்டின் கிழக்கு சராவாக் மாகாண வான் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சில நிமிடங்கள் வட்டமிட்ட சீன விமானங்கள் பின்னர் திரும்பிச் சென்றன.

இந்த செயல்பாட்டை தங்கள் நாட்டின் தேசிய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று மலேசியா கண்டித்துள்ளது.

ஆனால், சர்வதேச சட்டப்படியே தமது படையினர் செயல்பட்டதாக சீனா கூறியுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் உள்ள இடங்களுக்கு சீனா உரிமை கோருவதை மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், ப்ரூனை, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. பல தசாப்தங்களாக இந்த பிரச்னை உள்ளபோதும், சமீபத்திய ஆண்டுகளில்தான் சீனாவின் செயல்பாடுகளால் அந்த கடல் பகுதியில் பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.

தென் சீன கடல் பகுதியில் நைன் டேஷ் லைன் என்ற பகுதிக்கு உரிமை கோரும் சீனா, அங்கு ஏற்கெனவே கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அமைதி நோக்கங்களுக்காகவே அந்த இடங்களில் தமது முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாக சீனா கோரினாலும், அதன் செயல்பாடு சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அந்த கடல் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளின் அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments