கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் சிவப்பு வலயங்களாக!

கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் சிவப்பு வலயங்களாக!

கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் கொரோனா தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, மற்றும் உகன ஆகிய 6 பகுதிகளும் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலயத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்முனை நகரப்பகுதியில் சில கிராமசேவகர் பிரிவுகளும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும் திருகோணமலை நகர் பகுதியும் தனிமைப்படுத்ப்பட்டுள்ளன

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments