ஒஸ்லோ:
நோர்வே அரசு, வரும் இலையுதிர்காலத்தில் இருந்து கீழ்நிலை வகுப்புக்களில் (1–7 ஆம் வகுப்பு), மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டாது என்று அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் AI பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிய கல்வித்துறையின் அறிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பகுப்பாய்வு செய்து பார்க்கும் சிந்தனையின்றி AI வசதிகளை அப்படியே பயன்படுத்துவதாகவும், அது அவர்களின் அடிப்படை கற்றல் திறன்களையும் அறிவாற்றல் வளர்ச்சியையும், சுயசிந்தனைத்திறனையும் பாதிக்கும் என்றும் பாடசாலை அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, 8–10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளித்த பின்னரே மெதுவாக AI பயன்படுத்த வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
அதேநேரம், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் AI-ஐ பொருத்தமான முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறும் நோர்வேயின் கல்வித்துறை அமைச்சர், சிறு குழந்தைகளுக்கு விமர்சன சிந்தனை மற்றும் தன்னிச்சையான கட்டுப்பாட்டு திறன் போதுமானதாக இல்லை என்றும், ஆசிரியர்களுக்கும் AI குறித்த போதிய அறிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
25.06.2026






