குடத்தனையில் அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு! – மரத்துடன் மோதியது கன்ரர் வாகனம்!!

You are currently viewing குடத்தனையில் அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு! – மரத்துடன் மோதியது கன்ரர் வாகனம்!!

வடமராட்சி கிழக்கு – குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த கன்ரர் வாகனம் மீது சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் இதையடுத்து அந்த வாகனம் விபத்துக்குள்ளாகியது.

மணல் ஏற்றி வந்த கன்ரர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். இருப்பினும் கட்டளையை மீறி கன்ரர் பயணித்தமையால் வாகனத்தின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்த கன்ரர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது தப்பி ஓடியவர்களை கைது சிறீலங்கா காவல்த்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறீலங்கா காவல்த்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments