குடும்பப்பெண் சடலமாக மீட்பு!

குடும்பப்பெண் சடலமாக மீட்பு!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்த நிலையில் தூக்கில்தொங்கியநிலையில் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்த்துறை சடலத்தை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை, வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஈச்சங்குளம் காவல் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்த்துறை சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். அவரது தலைப்குதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments