குருநகரை முடக்குமாறு கோரிக்கை?

குருநகரை முடக்குமாறு கோரிக்கை?

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருநகர் கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65, 67ஆகிய பகுதிகளை முடக்குமாறு, கொரோனா தடுப்பு செயலணியிடம் அப்பகுதி சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனரென தெரியவருகிறது.

யாழ் குடாநாட்டில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவர் இனங்காணப்பட்டனர்.

அவ்வாறு இனங்காணப்பட்ட ஐவரில் மூவர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோதும் இருவர் போலியகொட மீன் சந்தைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர்.

அவ்வாறு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உறுதி செய்ய்பபட்டது.

இதன் அடிப்படையிலேயே, குருநகரின் இரு கிராம சேவகர் பிரிவுகளையும் உடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், யாழ். மாவட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு செயலணி தலைவரும் மாவட்டச் செயலாளருமான க.மகேசனிடம் வினவியபோது, குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை எதுவும் தற்போது வரை கிடைக்கப் பெறவில்லையென்றார்.

எனினும் சுகாதார பிரிவினரால் குறித்த கோரிக்கை விடப்படுமிடத்தில் அது தொடர்பில் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, உடன் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் கூறினார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments