குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!!

குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ  தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த மலையின் அடிவாரத்தில் பொலிசார் மற்றும் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த வித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!! 1
குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!! 2

குருந்தூர் மலையினை பார்வையிடச்சென்ற தேரர்களை படம் எடுக்க வேண்டாம் என்று அங்கு கடமையில் நின்ற பொலிசாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு குருந்தூர் மலையை பார்வையிடச் சென்ற பௌத்த துறவிகள் குழு குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!! 3
குருந்தூர்மலைக்கு படையெடுக்கும் பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும்!! 4
பகிர்ந்துகொள்ள