குளக்கட்டு ஊடான போக்குவரத்துக்குத் தடை!

குளக்கட்டு ஊடான போக்குவரத்துக்குத் தடை!

வவுனிக்குளம் வான் பாய்ந்து வருவதால், குளக்கட்டு ஊடான வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் 19ஆம் திகதியன்று, குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டதில், மூவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்தே, குளக்கட்டு ஊடான வாகனஙப் போக்குவரத்தை, நீர்ப்பாசனத் திணைக்களம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.

வவுனிக்குளத்தின் நீர் மட்டம், தற்Nபுhது, 26 அடியாக உயர்ந்துள்ளதுடன், 4 இஞ்சியாக வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், குளத்தில் குளித்தல், மீன்பிடித்தல் என்பனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வான்பாயும் குளத்தைப் பார்வையிடுவதற்காக, பல இடங்களில் இருந்தும், மக்கள் நாள்தோறும் வந்துசெல்வதால், வவுனிக்குளக்கட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு தேவையென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள