குளத்துக்குள் மூழ்கிய மகிழுந்துக்குள் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு!!

You are currently viewing குளத்துக்குள் மூழ்கிய மகிழுந்துக்குள் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு!!

குளம் ஒன்றுக்குள் மூழ்கிய மகிழுந்துக்குள் இருந்து, ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை Var மாவட்டத்தில் உள்ள Saint-Raphaël எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Drumont என அழைக்கப்படும் குளத்தில் இருந்து, மகிழுந்து ஒன்று ஜொந்தாமினரால் மீட்க்கப்பட்டது.  மகிழுந்துக்குள் ஐவரது சடலங்கள் இருந்துள்ளன. 19 தொடக்கம் 20 வயதுடையவர்களின் சடலங்களே அது எனவும், அவரைகளை இதுவரை அடையாளம் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சடலங்களில், நால்வர் ஆண்கள் எனவும், ஐந்தாமவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றனர்.  சம்பவம் தொடர்பில் அறிந்தவர்கள், ‘நேரில் கண்டவர்களுக்கு’ உள்ளூர் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments