முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பேராற்று பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்னாள் (19.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






