குவைத் ; 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

குவைத் ; 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

குவைத்தில் இருக்கும் 24 இந்தியர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் தடம் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. வளைகுடாவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 2 வரை 28 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தினசரி குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அவர்களில் 24 இந்தியர்கள், இரண்டு வங்காள தேசம் மற்றும் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குவைத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 317 ஆக உயர்த்தி உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments