கூட்டமைப்பின் கூட்டத்துக்கள் குழுச்சண்டை!

கூட்டமைப்பின் கூட்டத்துக்கள் குழுச்சண்டை!

தேர்தல்களின் போது கட்சிக்களிற்கிடையே போட்டியும் குற்றச்சாட்டுகளுமே இருப்பது வழமை ஆனால் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் உட்கட்சி மோதல் என்றுமில்லாதவாறு சந்தி சிரிக்குமளவிற்கு ஆகிவிட்டதுடன் அது இன்றைய கலந்துரையாடலில் வெளிப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிக்களிக் கட்சிகளின் உறுப்பினர்களிடையே கூட்டமைப்பின் 10 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் இன்றை நிகழ்விலேயே தங்கள் வாக்குகளை சரிக்கும் மோதல் இடம்பெற்றிருக்கிறது.

நிகழ்வின் முன்னதாக ஒளிப்படங்களை மட்டும் எடுத்த ஊடகவியலாளர்கள் பின்னர் நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று ஒரு போர் தொடுப்பதற்கான மன நிலையிலேயே கூட்டத்திற்கு அனைவரும் வந்திருந்ததனால் ஊடகர்களிற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கூட்டமைப்பின் கூத்துகளை அவரை மாறி இவர் என்று அனைவருமே உனக்கு மட்டும் என்று அவிட்டுவிட்டுக் கொண்டிருப்பதால் இன்றை காசாரமா உடகட்சி மோதல் தகவல்கள் வெளிவந்திருக்கிறன்றன.

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான காக்கா அண்ணன் சுமந்திரன் தொடர்பான ஊடக சந்திப்பை சரவணனின் உதயன் பத்திரிகை வெளியிட்டிருந்தது ஏற்கனவே சரிந்து வரும் செல்வாக்கை நிமிர்த்துவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வரும் சுமந்திரனுக்கு உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது மேலும் கடுப்பை ஏற்படுத்தியிருந்தது. நேரத்துடனேயே கட்டுக் கட்டாக உதயன் பத்திரிகையை கொண்டு வந்த சுமந்திரன் கூட்டத்திற்கு பிரசண்ணமாகியிருந்தவர்களிற்கு அவற்றை விநியோகித்தார்.

தாமதமாகவே கூட்டத்திற்கு வந்த சரவணபவன் வந்தவரத்திலேயே உடல் நிலை சரியில்லாது உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றார்.

கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

வேட்பாளர்களிற்கு உரையாற்றுவதற்கு உவ்வொருவருக்கும் 3 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தது

. மாவை சேனாதிராசா உரையாற்றிய போது, கட்சிக்குள் சுமந்திரன் தரப்பும், சரவணபவன் தரப்பும் மோதிக் கொண்டிருப்பதை- பகிரங்கமாக பெயர் சொல்லாமல்- குறிப்பிட்டு, அனைத்து தரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்றார்.

த.சித்தார்த்தன் உரையாற்றிய போது, தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் மோதலை சுட்டிக்காட்டினார். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கு வேட்பாளர்கள் முனைகிறார்கள். பேஸ்புக், பத்திரிகைகளில் மற்ற வேட்பாளரை அவதூறு செய்கிறார்கள். இதன் மூலம் எதிராளியை வீழ்த்தலாமென நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியே சிதைகிறது, ஒருவரையொருவர் அவதூறு செய்யாமல் பிரச்சார பணிகளில் ஈடுபட வேண்டுமென ஆலோசனை சொன்னார்.

அனேகமானவர்களின் கருத்து சுமந்திரனை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருந்தது சுமந்திரனும் சகட்டு மேனிக்கு உரையாற்றியதுடன் சித்தார்த்தனையும் ஒரு பிடி பிடித்தார்.

சித்தாரத்னுக்கு சுமந்திரன் அடி கொடுத்ததால் பொங்கி எழுந்து உரையாற்றிய கஜதீபன் அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார். சுமந்திரன் 5 வயதில் கொழும்பு போய், 48 வயதில் திரும்பி வந்துள்ளார். அவருக்கு இந்த மண்ணின் வரலாறு தெரிந்திருக்காமலிருக்க வாய்ப்புள்ளது என்றார்.

கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள உட்கட்சி மோதலால் கூட்டமைப்பில் வாக்கு வங்கி சடுதியாக சரிவை நோக்கி செல்வதாக  அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments