கூட்டமைப்பும் ஈ.பி.டி.பியும் ஒன்றுதான்-வி.மணிவண்ணன்!

கூட்டமைப்பும் ஈ.பி.டி.பியும் ஒன்றுதான்-வி.மணிவண்ணன்!

யாழ். மாநகர சபையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையாலேயே, தன் மீது சுமந்திரன் உறுப்புரிமை தொடர்பில் வழக்காடிவருகின்றாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈ.பி.டி.பியினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் சாடினார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில், நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பி கட்சியினரைக் கடுமையாகச் சாடி, தேர்தல் முடிவடைந்தப் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈ.பி.டி.பியிடம் சரணாகதி அடைந்தனரெனக் குற்றஞ்சாட்டினார்.

இப்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஈ.பி.டி.பியினர் கூட்டமைப்பினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டிபியினரையும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனரென, மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments