கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை!

You are currently viewing கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை!

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில், டிசெம்பர் 30ஆம் திகதி மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீக்கப்பட்ட இந்த உடற்பாகங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக, சட்டவைத்திய அதிகாரியாலும் தடையவியல் காவல்த்துறையாலும் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை, சட்டவைத்திய அதிகாரி முல்லைத்திவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள