கேப்பாபிலவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 136 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

கேப்பாபிலவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 136 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 220 பேர் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் தென்பகுதியினை சேர்ந்தவர்கள் இவர்களில் 136 பேர் 5 பேருந்துக்களில் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் காண்காணிக்கப்ப்ட நிலையில் கொரோன தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்விவைக்கப்பட்டுள்ளார்கள்.
86 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருக்கின்றார்கள்.
கேப்பாபிலவு 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கம்பகா மாவட்டத்தினை சேர்ந்த 125 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள