கேப்பாபிலவு காட்டிற்குள் பெருமளவான வெற்று மிதிவெடிகள் மீட்பு!

கேப்பாபிலவு காட்டிற்குள் பெருமளவான வெற்று மிதிவெடிகள் மீட்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாம் அண்மித்த காட்டுப்பகுதியில் மதிவெடியில் இருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் அதிகளவான வெற்று மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த பகுதியில் படையினர் சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மரம் ஒன்றின் அடியில் அதிகளவான மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன இவற்றை சோதனை செய்தபோது அவை வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது போரின் போது விடுதலைப்புலிகளால் கைவிடப்பட்டுள்ள மிதிவெடிகள் இவை என படையினர் தெரிவித்துள்ளார்கள்.


இச்சம்பவம் தொடர்பில் படையினரால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 654 வெற்று மிதிவெடி கவர்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments