கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் 18 பேருக்கு கொரோனா!

கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் 18 பேருக்கு கொரோனா!


முல்லைத்தீவு கேப்பாபிலவு  விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில் 18 பேருக்கு கொரொனாவைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.


மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைந்த 257 பேர் கடந்த 09.08.2020 அன்று கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் முதற்கட்டமாக யாழபோதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது 21.08.2020 அன்று ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.


மேலும் ஒரு தொகுதி பேருக்க தெற்கின் மில்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 12 பேருக்க கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில்  இருந்து கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments