கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மகஜர் கையளிப்பு!

கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மகஜர் கையளிப்பு!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

இன்று மாலை 2.30 மணியளவில் மாவட்ட செயலகத்திற்குச்சென்ற இந்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி,வடமாகாண ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் வழம்மிக்க பகுதிகள் பாடசாலை ,சுடுகாடு,தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவக் கட்டுப்பட்டடிலேயே இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments