கைதடியில் படை சோதனைசாவடிக்குள் உட்புகுந்த உந்துருளி! ஒருவர் காயம்!

கைதடியில் படை சோதனைசாவடிக்குள் உட்புகுந்த உந்துருளி! ஒருவர் காயம்!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இராணுவ சோதனை சாவடி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.

இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது.

 இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments