கைப்பற்றும் முனைப்புடன் உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா!

You are currently viewing கைப்பற்றும் முனைப்புடன் உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா!

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்ய துருப்புகள் மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர எல்லையில் இருந்து வெறும் 3 மைல்கள் தொலைவில் தற்போது ரஷ்ய துருப்புகள் நிலை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் தலைநகரை இலக்காக கொண்டு ரஷ்யாவின் 40 மைல்கள் நீண்ட டாங்கிகளின் அணிவகுப்பு தற்போது நகரத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைன் தரப்பில் எதிர் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்கு நகரமான இர்பின் மற்றும் புரோவரியின் கிழக்குப் பகுதியிலும் ரஷ்ய துருப்புக்கள் இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் புரோவரியில் கடும் எதிர் தாக்குதலை ரஷ்ய துருப்புகள் எதிகொண்டுள்ளதாகவும், Colonel Andrei Zakharov கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments