கொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

You are currently viewing கொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

கொக்கட்டிச்சோலை கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழ் நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன் போது 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீலங்கா புலனாய்வாளர்களால் தமிழ் இளைஞர்களுக்குள் திட்டமிட்டு உருவாக்கப்படும் வன்முறைகளும் சமூகசீர்கேடுகளும் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments