கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு!

கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு!


யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர்.

பின்னர் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments