கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் காய்ச்சலால் மரணம்!

கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் காய்ச்சலால் மரணம்!

கொரோனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்த கொண்டு வரப்பட்ட கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்றும் மாரடைப்பாலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள