கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை குடும்பத்திடம் வழங்கிய முல்லைத்தீவு வைத்தியசாலை!

You are currently viewing கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை குடும்பத்திடம் வழங்கிய முல்லைத்தீவு வைத்தியசாலை!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பிரதேசத்தில் வள்ளுவர்புரம் கிராமத்தில் பெண் ஒருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு விசுவமடு வள்ளுவர்புரம் கிராமத்தினைச் சேர்ந்த சற்குணநாதன் மங்களாதேவி (வயது 77) என்பவர் உயிரிழந்த நிலையில் அவருடைய பிசிஆர் மாதிரிகள் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று நண்பகலே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டு அது விசுவமடுவில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாளை முற்பகல் 11.30 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெறும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் பங்கேற்கும் வகையில் மரணச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குறித்த குடும்பத்தில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த வீடு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்தவாரமும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட சடலம் ஒன்றை கொரோனாச் சடலமாக மாறி அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கூட கழியாத நிலையில் மற்றொரு சம்பவம் இவ்வாறு இடம்பெற்றுள்ளமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments