கொரோனாவால் மேலும் ஐவர் மரணம், உயிரிழப்பு 165ஆக அதிகரிப்பு!

You are currently viewing கொரோனாவால் மேலும் ஐவர் மரணம், உயிரிழப்பு 165ஆக அதிகரிப்பு!

கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (18) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 160 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 165 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் 3 பேர் இன்றும் (18), ஒருவர் செவ்வாய்க்கிழமையும் (15), ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையும் (11) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள