கொரோனாவினால் பிரான்சின் நிலை என்ன?

You are currently viewing கொரோனாவினால் பிரான்சின் நிலை என்ன?


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பரிசுக்குள் பல சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதை அடுத்து, மேலும் சில இடங்களும் மூடப்படுகின்றன.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். அதன் படி, பரிசுக்குள் சென் நதியின் இருபக்க பாதைகளும் மூடப்படுகின்றன. நடப்பதற்கோ, இளைப்பாற மற்றும் பொழுது போக்குவதற்கு இங்கு செல்ல முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காரணங்களுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், Invalides மற்றும் Champ de Mars பகுதிகளும் மூடப்படுகின்றன. தவிர, பரிசில் உள்ள அனைத்து சந்தைகளும் மூடப்படுகின்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவும் தடை!!
ஒரு நாளில் மட்டுமே 100 இற்கும் மேற்பட்டவர்கள் பிரான்சில் சாவடைந்து வரும் நிலையில், சாவடைந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நண்பர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது என்பது முடியாத காரியமாக உள்ளது.

இது தொடர்பாக இறுதிச்சடங்கு ஏற்பாட்டு நிறுவனங்கள் பிரதமரிடம் தொடுத்த கேள்விக்கு, இறந்தவரின் துணைவி அல்லது துணைவன், மற்றும் முதற்கட்ட உறவுகள் மட்டும், அதாவது பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும், அதிகபட்சம் இந்த உறவுகளும் 20 பேரிற்கு மேல் கலந்து கொள்ள முடியாது என்றும் பிரதமர் பதில் அளித்துள்ளார்.

இறந்தவர்களிற்கான தேவாலயத் திருப்பலி கூட, பாதுகாப்பு முறை அனுமதித்தால் மட்டுமே நிகழ்த்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீஸ் – 20h00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு!!
இன்று இரவு 20h00 மணியிலிருந்து நீஸ் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சேவைகளான மருந்தகங்கள் முதற்கொண்டு அனைத்தும் 20h00 மணிக்கு முதல் பூட்டப்படுவதோடு மக்கள் யாரும் வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள