கொரோனாவுக்கு கிழக்குதான் இலக்கா?

கொரோனாவுக்கு கிழக்குதான் இலக்கா?

மட்டக்களப்பில் கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தொவித்து, மட்டக்களப்பு மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தினர், இன்று பணி பகிஸ்கரிப்பையும் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்த சட்டத்தரணிகள், நீதிமன்றுக்கு முன்பாக, “கொரோனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம்”, “கொரோனாவுக்கு கிழக்குதான் இலக்கா?”, “மட்டக்களப்பை சுடுகாடாக்காதே” போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடு, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றுமுழுதாகப் பாதிப்புக்குள்ளாக்குமென, மட்டக்களப்பு மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் இதன்போது தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments