கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது!!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது!!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் , எக்மோ உதவியுடன் எஸ்.பி.பி.க்.கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments