கொரோனா அமெரிக்கா : கடந்த 24 மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு!

கொரோனா அமெரிக்கா : கடந்த 24 மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸால் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கவுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கவுள்ளது. மேலும் அமெரிக்காவல் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3176 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 25,549 பேரும் ஸ்பெயின், பிரான்ஸ் முறையே 22,157 மற்றும் 21,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments