கொரோனா அமெரிக்கா ; 40 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!

கொரோனா அமெரிக்கா ; 40 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகின்றது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 746 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 29 ஆயிரத்து 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 39,158 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 68 ஆயிரத்து 285 பேர் குணமடைந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments