கொரோனா அறிகுறியைக் காட்டிக் கொடுக்கும் தலைக்கவசம்!

கொரோனா அறிகுறியைக் காட்டிக் கொடுக்கும் தலைக்கவசம்!

கொரோனா அறிகுறியான காய்ச்சல் இருந்தால் காட்டிக் கொடுக்கும் “அதி திறன் தலைக்கவசம்” ஒன்றை ரோம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து பார்த்துள்ளனர்.

இந்த தலைக்கவசத்தை அணிந்தால் 7 மீட்டர் தூரத்திற்குள் உள்ளவர்களின் உடல் வெப்பநிலை குறித்து அறிய முடியும். அதன் மூலம் காய்ச்சல் உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். விமான நிலையத்தில் இதனை பாதுகாப்பு அதிகாரிகள் அணிந்துகொண்டு பயணிகள் நுழையும் இடங்களில் பணியில் ஈடுபடுவார்கள்.

ஒருவரது உடல் அதிக வெப்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவரது விமான பயணம் ரத்து செய்யப்படும். ரோமில் இருந்து தற்போது இத்தாலியில் உள்ள நகரங்களுக்கு மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments