கொரோனா எதிரொலி : ஓஸ்லோ பள்ளிகள் ஈஸ்டருக்குப் பின்னரும் பூட்டப்படும் அபாயம்!

கொரோனா எதிரொலி : ஓஸ்லோ பள்ளிகள் ஈஸ்டருக்குப் பின்னரும் பூட்டப்படும் அபாயம்!

தவக்கால பண்டிகைக்குப் பின், முதல் வாரத்தில், ஒஸ்லோவில் பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் திறப்பது சாத்தியமற்றது என்று ஒஸ்லோவில் பள்ளி நகரசபை ஆணையாளர் Inga Marte Thorkildsen (SV) கூறியுள்ளார்.

தவக்கால பண்டிகை முடிந்தபின் பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படுமா என்று ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் கேள்வி கேட்கின்றார்கள் என்றும், செவ்வாய் மாலை அரசிடமிருந்து அதற்கான பதில் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒஸ்லோவில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களும் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், எப்படி இருந்தாலும், தலைநகரில் உள்ள பள்ளிகள் ஈஸ்டர் முடிந்த முதல் வாரத்தில் திறக்கப்படமாட்டாது என்றும் ஒஸ்லோவில் பள்ளி நகரசபை ஆணையாளர் Inga Marte Thorkildsen (SV) மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Aftenposten

பகிர்ந்துகொள்ள