கொரோனா எதிரொலி : தாமஸ், உபேர் கோப்பை பூப்பந்து போட்டிகள் தள்ளிவைப்பு!

கொரோனா எதிரொலி : தாமஸ், உபேர் கோப்பை பூப்பந்து போட்டிகள் தள்ளிவைப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக டென்மார்க்கில் எதிர்வரும் மே 16-ந் திகதி முதல் 24-ந் திகதி வரை நடக்க இருந்த தாமஸ் கோப்பைக்கான ஆண்கள் அணி பூப்பந்து வெற்றிக்கிண்ண போட்டி மற்றும், உபேர் கோப்பைக்கான பெண்கள் அணி பூப்பந்து வெற்றிக்கிண்ண போட்டி போன்றவை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அதாவது இந்த போட்டிகள் ஆகஸ்டு 15-ந் திகதி முதல் 23-ந் திகதி வரை நடைபெறும் என்று உலக பூப்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக பூப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், ‘வீரர்கள் உள்பட போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரின் சுகாதாரம், பாதுகாப்பு விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாகவே இந்த தள்ளிவைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments