கொரோனா எதிரொலி – LOCKDOWN நடவடிக்கையை நீடிக்கின்றது இத்தாலி!

கொரோனா எதிரொலி –  LOCKDOWN நடவடிக்கையை நீடிக்கின்றது இத்தாலி!

குறைந்தது, ஏப்ரல் 12 ஆம் திகதிவரை இத்தாலி, உள்பூட்டு (Locdown) நடவடிக்கைகளை விரைவாக விரிவுபடுத்தவுள்ளது என்று Reuters மற்றும் AFP கூறியுள்ளன.

மார்ச் 9 ஆம் திகதி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்த கடுமையான கொரோனா நடவடிக்கைகள் அடிப்படையில், ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை வரைதான் நீடிக்க வேண்டும் இருப்பினும் அது இப்பொழுது ஏப்ரல் 12 ஆம் திகதிவரை நீடிக்கவுள்ளது.

இத்தாலியில் 100,000 க்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11,591 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் குறைந்த அளவு அதிகரிப்பே கடந்த சில நாட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments