கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் இரண்டு புதிய மரணங்கள்!

கொரோனா கொடூரம் : ஓஸ்லோவில் இரண்டு புதிய மரணங்கள்!

ஒஸ்லோ நகராட்சியின் நீண்டகால பராமரிப்பு மனையில், மேலும் இருவர் சமீபத்திய நாட்களில் கோவிட் -19 வைரஸ் நோயால் இறந்துவிட்டதாக ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லம் உறுதிப்படுத்தியுள்ளது.

“Ellingsrudhjemmet” இல்லத்தில் வசிப்பவர் ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை இறந்துள்ளர், மேலும் அதே நாளில் “Nordseterhjemmet” இல்லத்தில் வசிக்கும் இன்னுமொருவரும் இறந்துள்ளர்.

ஒஸ்லோ நகராட்சியின் பராமரிப்பு மனைகளில் நடந்த தொற்றுநோயால் இதுவரை 27 குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் என்றும், குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட, சராசரியாக 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments