கொரோனா கொடூரம் : ASKER நகராட்சியில் ஏழாவது கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : ASKER நகராட்சியில் ஏழாவது கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் காரணமாக நகராட்சியில் வசிக்கும் மற்றொரு நபர் இறந்துவிட்டார் என்று அஸ்கர் நகராட்சி உறுதி செய்துள்ளது. அஸ்கரில் இது ஏழாவது மரணமாகும்.

அஸ்கர் நகராட்சி மருத்துவர் Meera Grepp இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அஸ்கரில் சமீபத்தில் நிறுவப்பட்ட கொரோனா தொற்று மையத்தில் ஏப்ரல் 8 புதன்கிழமை, குறித்த நபர் இறந்துள்ளார். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவர் பற்றிய கூடுதல் தகவல்கள் வழங்கப்படவில்லை.

அஸ்கர் நகராட்சித் தலைவர் Lene Conradi இரங்கல் தெரிவித்து, தனது ஆழ்ந்த அனுதாபங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கூறுவதாக, நகராட்சி செய்திக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments