கொரோனா கொள்ளை : சென்னையில் கடையை உடைத்து மதுபானங்கள் கொள்ளை!

கொரோனா கொள்ளை : சென்னையில் கடையை உடைத்து மதுபானங்கள்  கொள்ளை!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் அடைப்பு வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்த அரசு மதுபான கடையின் (TASMAC ) அடைப்பை உடைத்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் துணையுடன் மதுபானம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைப்பு வைத்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றின் அடைப்பு உடைக்கப்பட்டு நள்ளிரவில் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழியர்கள் துணையுடன் மதுபானம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments