கொரோனா சென்னை : அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு !

கொரோனா சென்னை : அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு !

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள 7 உணவகங்களும் சேர்த்து மொத்த 407 உணவகங்கள் சென்னையில் உள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 அலகுகளில் தலா இரண்டு வீதம் 400 அம்மா உணவகங்களும், அரசு மருத்துவமனைகளில் உள்ள 7 உணவகங்களும் சேர்த்து மொத்த 407 உணவகங்கள் உள்ளன.

ஊரடங்கு காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் ஏப்ரல் 23 முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments