கொரோனா சென்னை : பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கொரோனா சென்னை : பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 19ம் திகதி இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், 20ம் திகதி மேலும் ஒரு நபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்டுத்தியது.

களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சிறப்புப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியது.

காலை 10.30 மணியளவில் தொடங்கி பகல் 1.30 மணி வரை, சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தலைமைச் செயலகம் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களிலும் சுமார் 50க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் விரைவுப் பரிசோதனை (Rapid Test) செய்து கொண்டனர். பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்று 98 பத்திரிக்கையாளர்களுக்கு விரைவுப் பரிசோதனை செய்யப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments