“கொரோனா” தடுப்புக்கான மிக இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தது, நோர்வே!

“கொரோனா” தடுப்புக்கான மிக இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தது, நோர்வே!

மிக வேகமாக பரவிவரும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை நோர்வே அரசு இன்று அறிவித்துள்ளது.

 1. வீடுகளுக்கு வெளியே அதிகபட்சமாக 5 பேருக்கு மேல் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் (ஒரே வீட்டில் வசிக்கும் அதே குடும்பத்தில் 5 பேருக்கு மேல் இருந்தால் இது பொருந்தாது)…
 2. உள்ளக அரங்குகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அதிக பட்சமாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுத்தல்…
 3. நிரந்தரமாக பொருத்தப்பட்ட இருக்கைகள் உள்ள மண்டபங்களில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி…
 4. மரணச்சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி…
 5. நாடு முழுவதிலுமுள்ள மதுபானச்சாலைகளிலும், நிகழ்வுகளிலும் மதுபான விற்பனை / வழங்கல் தவிர்க்கப்படல்…
 6. ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு வீடுகளில் விருந்தினர்களை தவிர்ப்பது…
 7. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதோடு, மலைவாசத்தலங்களுக்கு செல்வதும் தவிர்க்கப்படல்…
 8. பல்பொருள் அங்காடித்தொகுதிகளில் (Shopping Centre) ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அனுமதிக்கும் ஒழுங்குகள் செய்யப்படுதல்…
 9. நாடளாவிய ரீதியில் அனைத்து இளநிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் “சிவப்பு” அபாய நிலையில் வைத்திருத்தல்…
 10. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் யாவும் இலத்திரனியல் மயமாக்கப்படுத்தல்…
 11. அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் முடிந்தளவு வீடுகளில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்…
 12. பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் மற்றும் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பேணப்படுதல்…
 13. உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் நிலையங்கள் போன்றவை முற்றாக மூடப்படுத்தல்…

போன்ற விடயங்கள் 04.01.2021 முதல் 18.01.2021 வரை அமுலில் இருக்குமென பிரதமர் “Erna Solberg” அம்மையார் அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள