கொரோனா தளர்வு : அனைத்து ஒஸ்லோ மழலையர் பள்ளிகளும் அடுத்தவாரம் திறக்கப்படும்!

கொரோனா தளர்வு : அனைத்து ஒஸ்லோ மழலையர் பள்ளிகளும் அடுத்தவாரம் திறக்கப்படும்!

ஒஸ்லோவில் முதல் மழலையர் பள்ளி எதிர்வரும் திங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து ஏனைய மழலையர் பள்ளிகளும் திறக்கப்படும் என்று வளர்ச்சி மற்றும் அறிவுத்திறனுக்கான ஆலோசகர் Inga Marte Thorkildsen NTBக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து மழலையர் பள்ளிகளும் ஏப்ரல் 20-27 காலப்பகுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதர பள்ளிகள் மற்றும் AKS ஏப்ரல் 27 க்குப் பின்னர் படிப்படியாக திறக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தவக்காலத்திற்கு முன்னதாக , ஏப்ரல் 20 திங்கள் முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1-4 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 27 ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித் திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள