கொரோனா தீவிரம் ; புரிந்து கொள்ளாததால் செல்வாக்கை இழந்து வரும் Donald Trump!

  • Post author:
You are currently viewing கொரோனா தீவிரம் ; புரிந்து கொள்ளாததால் செல்வாக்கை இழந்து வரும் Donald Trump!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (Johns Hopkins University) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பலி எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 61,656 ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.

இவற்றில் பாதிப்பு எண்ணிக்கையில் நியூயார்க் (3,06,158 பேர்) மற்றும் நியூஜெர்சி (1,16,264 பேர்) நகரங்கள் முன்னணியில் உள்ளன. இந்நகரங்களில் முறையே 23 ஆயிரத்து 474 மற்றும் 6 ஆயிரத்து 770 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை வியட்நாம் போரின்போது பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனாவால் உலகிலேயே அதிக இறப்புகளையும் அதிக பாதிப்புகளையும் சந்திக்கும் நாடு அமெரிக்காதான்.

கொரோனா பாதிப்பால் அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர். இருந்தும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கொரோனா வைரஸ் நெருக்கடியின் தீவிரத்தை புரிந்துகொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என CNN செய்தி வெளியிட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மூத்த அதிகாரி Nancy Messonnier பிப்ரவரி 27 அன்று கொரோனா நோய் அமெரிக்காவை பாதிப்பது தவிர்க்க முடியாதது என்றும் “மோசமாக” இருக்கலாம் என்றும் எச்சரித்தார்.

ஆனால் Donald Trump நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை. அதற்கு பதில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அளிக்கும் விளக்கங்களும், புது புது யோசனைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, உடலுக்குள் வைரஸைக் குணப்படுத்துவதற்கான வழியாக கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமறு டிரம்ப் தனது மருத்துவக் குழுவிடம் கேட்டார். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர் கருத்துக்கள் ‘கிண்டல்’ என்று கூறினார்.

முன்னதாக நிலையில் William Bryan கருத்தை மேற்கோள் காட்டி சூரிய ஒளி மூலம் கொரோனா பலியாகும் என்பது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது. அதனால் நம்முடைய உடலில் அதிக அளவு ஒளியை செலுத்தினால் ஒருவேளை கொரோனா குணமடைய வாய்ப்பு உள்ளது.

நமது உடலுக்குள் புற ஊதா கதிர்கள் கொண்ட ஒளிகள் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒளிகளை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும். நமது உடலுக்கு உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ இப்படி நாம் அதிக சக்தி வாய்ந்த ஒளியை அனுப்ப வேண்டும். நமது உடலுக்கு எப்படி மருந்தை செலுத்துகிறோமோ அதேபோல் செலுத்த வேண்டும். நீங்கள் இதை இன்னும் பரிசோதனை செய்யவில்லை. இதை நாம் சோதனை செய்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில், கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்று கேள்விப்பட்டேன் என்று தெரிவித்தார். Donald Trump யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர்.

Reuters நடத்திய கருத்து கணிப்பில் Donald Trump இன் செல்வாக்கு குறைந்து வருகிறது. 43 விழுக்காடு அமெரிக்கர்கள் Trumpபின் செயல்பாடுகளை ஆதரவாகவும், அதே அளவுக்கு கொரோனாவை கையாளும் பணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவேளை இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால், பதிவான ஓட்டுகளில் 44 விழுக்காடு பேர் ஜனநாயக கட்சி வேட்பாளரான Joe Bidenனுக்கும், 40 விழுக்காடு பேர் Trumpக்கு ம் ஆதரவாக வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள