கொரோனா தொற்று! – மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!

You are currently viewing கொரோனா தொற்று! – மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!

பிரான்சின் நேற்றைய தகவலின் படி கொரோனா தொற்று காரணமாக அதிகளவான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.   24 மணிநேரத்தில் 833 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 9022 ஆக அதிகரித்துள்ளது.   தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணிநேரத்தில் 230 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 1,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேவேளை, 24 மணிநேரத்தில் 68 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 112,289 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்85,765 பேர் மருத்துவமனையிலும், 26,524 பேர் முதியோர் காப்பகங்களிலும் சாவடைந்துள்ளனர்.   24 மணிநேரத்தில் 5.775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பல கொரோனா பரிசோதனை மையங்கள் மூடப்படுவதால் இந்த குறைவான எண்ணிக்கை பதிவாகியுள்ளது.  6,310,933 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments