கொரோனா நோர்வே : 50 க்கும் குறைவானவர்களே சுவாசக்கருவிகளில்!

கொரோனா நோர்வே : 50 க்கும் குறைவானவர்களே சுவாசக்கருவிகளில்!

மார்ச் 24 க்குப் பின்னர் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், ஏப்ரல் 1 ஆம் திகதி நோர்வே மருத்துவமனைகளில் அதிகபட்சம் 99 பேர் சுவாச சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து மருத்துவமனை அனுமதி மற்றும் தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது.

நோர்வேயில் இதுவரை மொத்தம் 162 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். ஏறக்குறைய 7,000 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

VG யின் கணக்கெடுப்பு, சுகாதார அமைச்சின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்படடவர்களை காட்டுகின்றது. எல்லா சுகாதார நிறுவனங்களும் தங்கள் மருத்துவமனைகளுக்கான தகவல்களை புதுப்பிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என VG கூறியுள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments