“கொரோனா” பரவல்! முடக்கப்படும் நோர்வேயின் மற்றோர் பிரதான நகரம்!!

“கொரோனா” பரவல்! முடக்கப்படும்  நோர்வேயின் மற்றோர் பிரதான நகரம்!!
Kristiansand captured in the blue hour from Dueknipen

நோர்வேயின் பிரதான பெருநகரங்களில் ஒன்றான “Kristiansand” நகரம், “கொரோனா” பரவல் காரணமாக முடக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

  1. இறுதிச்சடங்குகள் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன.
  2. அனைத்து உணவகங்களும் மூடப்படுகின்றன. எனினும், உணவு வகைகளை முன்பதிவு செய்து எடுத்துச்செல்ல (Take away) அனுமதியுண்டு.
  3. அனைத்து உடல் பயிற்சி நிலையங்களும் மூடப்படுகின்றன.
  4. தனியார் வீடுகளில் அதிகமாக 5 விருந்தினர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
  5. அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் தடை செய்யப்படுகின்றன.
  6. அனைத்து மேனிலைப்பள்ளிகளும் (Videregående skoler) சிவப்பு நிலைக்கு கொண்டுவரப்படுவதோடு, அனைத்து கீழ்நிலைப்பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் மஞ்சள் நிலைக்கு கொண்டுவரப்படும்.

மிகவும் வேகமாக பரவிவரும் “பிறழ்வடைந்த கொரோனா” வைரஸின் ஆபத்து இன்னமும் இந்நகரை பாதிக்காமல் இருந்தாலும், அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் முன்கூட்டிய இந்நடவடிக்கைகள் அவசியமாக இருப்பதாக அந்நகரத்தில் நகரபிதா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள