“கொரோனா” பாதிப்பில் இரண்டாம் இடத்தில் நோர்வே! நாட்டை முற்றாக தனிமைப்படுத்த கோரிக்கை!!

“கொரோனா” பாதிப்பில் இரண்டாம் இடத்தில் நோர்வே! நாட்டை முற்றாக தனிமைப்படுத்த கோரிக்கை!!

“கொரோனா” பரம்பலில், உலகளாவிய ரீதியில், விகிதாசாரப்படி இரண்டாமிடத்தில் நோர்வே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலகளாவிய ரீதியில் சீனா, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனினும், நாடுகளுக்கிடையிலான குடிசன பரம்பலின்படியான விகிதாசார முறைப்படி பார்க்கும்போது, இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் நோர்வே இருப்பதாக சொல்லப்படுகிறது.

“கொரோனா” பரம்பலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடந்த வியாழக்கிழமை அரசாங்கம் பல்வேறு விதிகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவையனைத்தும் காலந்தாழ்த்திய நடவடிகைகள் என விசனம் தெரிவித்திருக்கும், வட நோர்வேயின் முதன்மை வைத்தியசாலையின் பிரதான வைத்தியரான “Mads Gilbert”, பாதுகாப்பு நடவடிக்கைகள் காலம்தாழ்த்தி அறிவிக்கப்பட்டதால், வைரஸ் பரம்பல் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு சென்றுள்ளதாகவும், நாடு ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஒருமணி நேரத்துக்கு ஆறு அல்லது ஏழு பேர் “கொரோனா” பாதிப்புக்கு ஆளாவதாக கவலை தெரிவிக்கப்படும் நிலையில், காலம் தாழ்த்திய அரசின் நடவடிக்கைகளால், “கொரோனா” பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து பலர் நோர்வேக்குள் நுழைந்துள்ளதாகவும், தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் முழுமையாக இருக்கவில்லையெனவும், காற்றின்மூலம் தொற்று பரவும் விடயத்தில் சீனா மற்றும் ஆசிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டதை போன்ற கடுமையான முன்னேற்பாடுகள் நோர்வேயில் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும், தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கான அத்தியாவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கால அவகாசம் இருந்தும் அதிகாரிகள் அசட்டையீனமாக இருந்துள்ளதாகவும் விசனம் தெரிவிக்கும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையின் நோய்த்தொற்று தொடர்பில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியரான “Bjørg Marit Andersen” அம்மையார், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பத்திலேயே அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளாமல், மாகாண நிர்வாகங்களின் பொறுப்பில் விட்டிருந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டுமெனவும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments