கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை பின்தள்ளியது ரஷ்யா!

You are currently viewing கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற  நாடுகளை  பின்தள்ளியது ரஷ்யா!

ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் Putin எடுத்து வருகிறார். ரஷ்யா தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின் தள்ளி ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மொத்த உயிரிழப்புகள் 1,625 ஆக அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள